மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை
மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள ஸ்ரீ ஆனந்தமீனாட்சி, அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகருக்கு குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகருக்கு மஞ்சள், திரவியப்பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள், நால்வருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மங்கள தீபம் நடைபெற்றது. இதையடுத்து மாணிக்கவாசகர், பெருமான் உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கல்குறிச்சி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.