வென்னிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-06-12 12:31 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் குறும்பலாப்பேரி பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டது.

மாலையில் சப்பரம் வீதி உலா வருதல், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்