உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-30 19:09 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வாமனர சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஓணம் பண்டிகையை யொட்டி மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி மற்றும் பஞ்சபருவ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ தியாகராஜ பெருமாள் வீதி உலா காட்சி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தான ஏஜென்ட் கிருஷ்ணன் என்கிற கோலாகலன் தலைமையில் விழா குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்