நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-08-03 18:45 GMT

ஆடிப்பெருக்கையொட்டி நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில், ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில், ஏ.எஸ்.பேட்டை செல்வ விநாயகர் கோவில், மோகனூர் ரோடு பாலதண்டாயுதபாணி கோவில் என நகர் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்