முத்து முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
திருக்கடையூர் முத்து முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள கீழ ராஜ கோபுர வாசலில் முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி முத்து முனீஸ்வரர் சாமிக்கு பால், தேன், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.