வரதராஜபெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

வரதராஜபெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-12-24 18:45 GMT

நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்திப்பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது வரதராஜபெருமாளுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்