மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Update: 2022-06-04 14:05 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட்டாரங்களில் நடப்பு ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 செயல்படுத்தப்பட உள்ள 167 ஊராட்சிகளில் மட்டும் 7-ந்தேதி வேளாண்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் மூலமாக நலத்திட்ட உதவிகள் அளிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் வகையில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள ஊராட்சி கட்டிடம், சமுதாயக்கூடம், கிராம சேவை மைய கட்டிடம், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.

இந்தச் சிறப்பு முகாம் நடக்கும் இடங்களிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஊராட்சிகளில் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று உதவி உபகரணங்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். முகாம்கள் நடக்கும் கிராம ஊராட்சிகளின் பெயர்கள் மற்றும் முகாம் நடக்கும் இடம் குறித்த விவரம் www.tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த முகாம் தொடர்பான பணிகளை வேளாண்மை துறை துணை இயக்குனர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்த முகாம் குறித்து சந்தேகம் அல்லது உதவி ஏதேனும் தேவைப்பட்டால் வேளாண்மைத் துறை துணை இயக்குனர்கள் அல்லது திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்