அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-06-28 17:26 GMT

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஆடிட்டர் மோகன், பி.பாபு. ஆர்.கோபாலகிருஷ்ணன், கே.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமைஆசிரியர் அகிலா வரவேற்றார்.

குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மருத்துவ முகாமை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எம். மாறன்பாபு, வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.விமல் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 25 மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பெண்கள் நலம், பொது மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர்கள் தீபா, சரவண பிரியா, சுகாதார ஆய்வாளர் அலி, தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும், மாணவிகளின் கைகளால் உருவாக்கப்பட்ட தூய்மைப்பணி விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்