சிறப்பு மருத்துவ முகாம்

கொட்டாரக்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-09-14 18:45 GMT

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கொட்டாரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார். முகாமில் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம், கண், பல் மற்றும் சித்த மருத்துவம், யோகா, பிசியோதெரபி, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்து 22 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், ஊராட்சி துணைத்தலைவர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ஏசுநாதன், பரமநாதன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 5 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்