கும்பகோணம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

கும்பகோணம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

Update: 2022-12-25 19:32 GMT

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கும்பகோணம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

அலங்கார அன்னை பேராலயம்

கும்பகோணம் அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு நடந்த திருப்பலியில் ஏசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் பைபிள் வசனங்கள் வாசிக்கப்பட்டு, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் குழந்தை ஏசு சொரூபத்தை ஆயர் அந்தோணிசாமி உயர்த்தி காண்பித்து குழந்தை ஏசுவின் பிறப்பை அறிவித்தார். இதில் மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை சிங்கராயர், பங்குத்தந்தை பிலாமின்தாஸ், உதவி பங்குத்தந்தையர்கள் எட்மன்ட் லூயிஸ், பிரேம்நாத் மற்றும் செயலாளர் செல்வா, பொருளாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சி.எஸ்.ஐ. தோமா ஆலயம்

கும்பகோணம் - தஞ்சை மெயின்ரோட்டில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை தூய தோமா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சபையின் குரு ராய்கெஷியான் தலைமையில் அதிகாலை 4.30 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சபையின் பொருளாளர் ஆல்பர்ட், செயலாளர் ஸ்ரீராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.

லுத்ரன் திருச்சிலுவை ஆலயம்

கும்பகோணம் மேம்பாலம் அருகே நீடாமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள லுத்ரன் திருச்சிலுவை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நேற்று காலை 8.30 மணிக்கு சபையின் குரு ஜான்சன் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது. இதேபோல் கும்பகோணம் ஏ.ஜெ.சி. சபையில் பாஸ்டர் ஞானதாஸ் தலைமையில் காலை 5 மணிக்கும், கும்பகோணம் ரெயில் நிலையம் அருகில் உள்ள நல்மேய்ப்பன் சபையில் பாஸ்டர் ஜேம்ஸ், நாதர் நகர் ஒரே வழி ஏசு சபையில் பாஸ்டர் ஜேக்கப்மனோகரன் ஆகியோர் தலைைமயில் ஆராதனை நடந்தது. அசெம்பிளி ஆப் காட் உள்ளிட்ட பல்வேறு சபைகளில் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

பாபநாசம்

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பாபநாசம் பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 12 மணிக்கு பங்கு தந்தை குழந்தை ஏசு சொரூபத்தை உயர்த்தி காண்பித்தார். தொடர்ந்து உதவி பங்கு தந்தை தார்திஸ் அந்த சொரூபத்தை புனிதம் செய்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்