காய்ச்சல் சிறப்பு தடுப்பு மருத்துவ முகாம்

திருமுண்டீச்சரம் கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு தடுப்பு மருத்துவ முகாம் கலெக்டர் சி.பழனி தொடங்கி வைத்தார்

Update: 2023-03-10 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கிராமம் என்கிற திருமுண்டீச்சரம் கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராணிராமச்சந்திரன் தலைமைதாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தனகோட்டிஸ்ரீதர், ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரியாமணிகண்டன், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து 4 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், நடமாடும் மருத்துவக்குழு மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சென்று காய்ச்சல் சிறப்பு தடுப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. ஒரு நாளைக்கு 117 கிராமங்கள் என சுழற்சி முறையில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவர் ஆலோசனை பெற்று தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார். இதில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) பொற்கொடி, டாக்டர்கள், ஷ்மிகா, பிரித்திவிராஜ், சரண்யா, பாக்கியலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக், நந்தகோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்