செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு குறை தீர்வார முகாம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறை தீர்வார முகாம் நடைபெற்றது.

Update: 2022-12-20 10:18 GMT

 

கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மொத்தம் 240 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட 16 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறை தீர்வார முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 5 நபர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், தனி துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் (பொறுப்பு லட்சுமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்