டிரைவர்களுக்கு கண் பரிசோதனை சிறப்பு முகாம்

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-06-26 11:18 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள தனியார் பஸ் டிரைவர்கள், பள்ளி கல்லூரி டிரைவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு கண் பரிசோதனை முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட்ராகவன், ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.வி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு மருத்துவ முகாமில் அரசு மருத்துவமனை டாக்டர் பரான் சவுத் கலந்து கொண்டு, ஆட்டோ, கார் கனரக வாகனங்களின் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.

இதில் 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு பரிசோதனை முடித்த உடனே இலவசமாக கண்ணாடிகளை ரோட்டரி சங்கத்தினர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, என்.வெங்கடேசன், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்