சிறப்பு அலங்காரம்

சேவுகப் பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Update: 2022-11-02 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வாரம் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. முன்னதாக மூலவர் சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியருக்கு 26 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பிடாரி அம்மனுக்கும், சுப்பிரமணியன் வள்ளி தெய்வானைக்கும் 16 வகையான அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் மற்றும் பிடாரி அம்மன் சுப்பிரமணியன் வள்ளி தெய்வானையுடன் மலர் மாலை சூட்டி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்