சிறப்பு அலங்காரம்
கூத்தாநல்லூர் அருகே அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி, மரக்கடை தேர் வடக்கு தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அங்காளம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.