சிறப்பு குறைதீர்வு முகாம்
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம்
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு குறை தீர்வு முகாம் தாசில்தார் இளவரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்னனு குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை பொதுமக்களிடமிருந்து பெற்று உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வட்ட வழங்கல் அலுவலர் வேலு, மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், தயாநிதி, இளநிலை உதவியாளர் பிரசாத், வட்ட பொறியாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.