பிடாரி காளியம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம்
வாணாபுரம் அருகே பிடாரி காளியம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம் நடந்தது.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் யாகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பால், தயிர், வெண்ணெய், பன்னீர் உள்ளிட்டவைகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. நள்ளிரவு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்பு மிளகாய் யாகம் நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.