வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

Update: 2023-02-10 18:58 GMT

இளையான்குடி, 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6 பி-ல் இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் படிவம் 6 பி-ல் இணைக்கப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளித்து அட்டையுடன் இணைக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்