பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் சிறப்பு முகாம்
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் இயக்குனர் உத்தரவின் பேரிலும், நீதிமன்ற அனுமதியின் பேரிலும் மேற்படி நிறுவன பங்குதாரர்கள் நிறுவனங்களிலிருந்து சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் வகையில் விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் புகார் அளிக்கலாம். மேலும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் செய்யலாம் என விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கூறினார்.