வேளாண்மை துறை சார்பில் 35 கிராமங்களில் சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் 35 கிராமங்களில் சிறப்பு முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-04 17:01 GMT

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பாக 2021-2022-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் வருகிற 7-ந் தேதி 35 கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

முகாமில் வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலை துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகாமில் பட்டா மாற்றம், விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர் கடன் வழங்குதல் மற்றும் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

அரக்கோணம் தாலுகாவில் தணிகை போளூர், வடமாம்பக்கம், இச்சிபுத்தூர், பாராஞ்சி, செம்பேடு, கைனூர் ஆகிய இடங்களிலும், ஆற்காடு தாலுகாவில் தாஜ்புரா, மாங்காடு, மேலகுப்பம், ஆயிலம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களிலும், காவேரிப்பாக்கம் தாலுகாவில் பானாவரம், கோடம்பாக்கம், புதுப்பட்டு, கர்ணாவூர் ஆகிய பகுதியிலும், நெமிலி தாலுகாவில் காட்டுப்பாக்கம், சித்தேரி, அரிகலப்பாடி, நெல்வாய், சயினாபுரம் ஆகிய கிராமங்களிலும், சோளிங்கர் தாலுகாவில் ஐப்பேடு, பாண்டிய நல்லூர், ஜம்புகுளம், கொடைக்கல் மற்றும் திமிரி வட்டத்தில் வேம்பி, சென்னசமுத்திரம், வளையாத்தூர், வரகூர், புங்கனூர், காவனூர், துர்கம் மற்றும் வாலாஜா தாலுகாவில் நவ்லாக், நரசிங்கபுரம், அனந்தலை ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்