பழங்குடியின மக்கள் வன உரிமைச்சான்று பெற சிறப்பு முகாம்

கல்வராயன்மலை உள்பட 3 தாலுகாக்களில் பழங்குடியின மக்கள் வன உரிமைச்சான்று பெற சிறப்பு முகாம் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

Update: 2023-02-04 18:45 GMT

கள்ளக்குறிச்சி

 கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வனஉரிமைச்சான்று

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பழங்குடியின மக்கள் வன உரிமைச்சான்று பெறுவது தொடர்பான விண்ணப்பங்கள் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வருவாய் கிராமங்களில் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கல்வராயன்மலை, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.

9-ந் தேதி

அதன்படி வருகிற 9-ந் தேதி கல்வராயன்மலை தாலுக்காவுக்குட்பட்ட அரவங்காடு, மணியார்பாளையம், இன்னாடு, ஆரம்பூண்டி, வெள்ளிமலை, வண்டகப்பாடி, தொரடிப்பட்டு, மேல்பாச்சேரி, குண்டியாநத்தம், கரியலூர், வாரம், கிளாக்காடு, கூடாரம், வெள்ளேரிக்காடு, ஆலனூர், சேராப்பட்டு, குறும்பலூர் கிராமங்களிலும், சங்காராபுரம் தாலுகாவுக்குட்பட்ட மூலக்காடு, பாச்சேரி, புதுபாலப்பட்டு, கள்ளிப்பட்டு மற்றும் சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட பொட்டியம், மல்லியம்பாடி ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

10, 11-ந் தேதி

இதைத் தொடர்ந்து கல்வராயன்மலை தாலுகாவுக்குட்பட்ட மேலாத்துக்குழி, வன்னியூர், கெண்டிக்கல், எழுத்தூர், நாரணம்பட்டி, கருவேலம்பாடி, மாவடிப்பட்டு, உப்பூர், கள்ளிப்பாறை, வெங்கோடு, மேல்நிலவூர், கீழ்நிலவூர், வஞ்சிக்குழி, வாழைக்குழி ஆகிய கிராமங்களில் வருகிற 10-ந் தேதியும், கீழாத்துக்குழி, மொழிப்பட்டு, வாழப்பாடி, முண்டியூர், தொரங்கூர், நொச்சிமேடு, எருக்கம்பட்டு, மொட்டையனூர், வில்லத்தி, பெருமாநத்தம், பெரும்பூர், சிறுக்கலூர் ஆகிய கிராமங்களில் வருகிற 11-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

கிராமசபை கூட்டம்

மேலும் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்திடும் வகையில் கிராம சபை கூட்டம் நடைபெறும்,இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்