சிறுபான்மையினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்நாளை மறுநாள் நடக்கிறது

சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-01-21 18:45 GMT

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) சார்பில், கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் பொருட்டு, தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடனுதவிகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கடனுதவி வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் 7 இடங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

அதன்படி, மதுரை மாவட்ட மத்திய வங்கியின் அல்லிநகரம் கிளை, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போடி கிளை, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் சிறுபான்மையினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்