தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம்

Update: 2022-07-22 17:14 GMT

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள நபர்களுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ளவர்களில் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் சிலருக்கு சரியான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்ற காரணத்தினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

அதனை சரி செய்யும் வகையில் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக ஆன்லைன் பதிவின்போது முறையாக இணைக்கப்படாத ஆதார் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான நகல் போன்ற ஆவணங்கள் பெறப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டது.

இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத நபர்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்