தூத்துக்குடியில் ஆதாருடன், செல்போன் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

தூத்துக்குடி கோட்டத்தில் ஆதாருடன், செல்போன் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.

Update: 2022-09-27 18:45 GMT

தூத்துக்குடி கோட்டத்தில் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு முகாம்

மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், மீனவர்கள் மானியம் பெறுபவர்கள், தமிழ்நாடு தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள், ஓய்வூதியதாரர்கள், அரசு மானியம் பெறும் அனைத்து பயனாளர்களும் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஆதார் அட்டையுடன், செல்போன் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.


இந்த முகாம் இன்று (புதன்கிழமை) முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை தூத்துக்குடியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நடக்கிறது. அதேபோன்று தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலமும் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைப்பதன் மூலம் பல்வேறு சேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்