மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத் தினாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க அவர்களின் பராமரிப்பாளர்களுடன் வந்தனர்.
முகாமில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக விண்ணப்பித்தனர்.
அப்போது சிறப்பு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்தனர்.