காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி வளாகத்தில் ஜி.ஆர். பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஜி.ஆர். பட்டா பிரிவு தாசில்தார் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். பள்ளத்தூர் பேரூராட்சி தலைவர் சாந்திசிவசங்கர் பட்டா மாறுதல் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை வழங்கினர். முகாமில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.