ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-04 16:58 GMT

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

ஆதார் எண் இணைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது Voter Helpline APP (VHA) என்ற செயலி மூலமாக தாங்களே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம் என்று கலெக்டர் சாந்தி கேட்டு கொண்டுள்ளார். இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 1,479 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நேரடியாக 6 பி படிவம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள், உதவி மையம், இ-சேவை மையம், மக்கள் சேவை மையம் ஆகியவற்றில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 5.47 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிறப்பு முகாம்

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று6 பி படிவத்தை பெற்று கொண்டனர். பின்னர் அவர்கள் விண்ணப்ப வடிவத்தில் ஆதார் எண், வாக்காளர் எண் மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடமே கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்