வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் நடக்கிறது.
சிங்கம்புணரி,
போலியான வாக்காளர் அடையாள அட்டையை கண்டுபிடிக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தாசில்தார் கயல்செல்வி கூறுகையில், சிங்கம்புணரி நகர் பகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வகையில் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை முதல் 31-ந் தேதி வரை வாரநாட்கள் அனைத்திலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். முகாமுக்கு வருபவர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் நகல், ஆதார் அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.