சேலம் மண்டலத்தில் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Update: 2023-06-02 20:02 GMT

கோடை விடுமுறைக்கு பிறகு 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் சேலம் மண்டலத்தில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சேலம் மண்டலமான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, திருவண்ணாமலை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூருக்கும் இன்று (சனிக்கிழமை) முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மண்டலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

7-ந் தேதி வரை இயக்கம்

இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 7-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்