பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2023-01-05 19:44 GMT

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வரும் பயணிகள் வசதிக்காக நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி, நாகர்கோவில், களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் ஆகிய ஊர்களுக்கு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) 13-ந், 14-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திரும்ப செல்லுதல்

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், திசையன்விளை, உடன்குடி, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பஸ் நிலையங்களில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்கு 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் மற்றும் நெல்லை, தென்காசி, திருச்செந்தூர், நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்