பெரம்பலூரில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா பெரம்பலூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. வங்கி கடன் கோரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு ஆதார் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகிய சான்றுகளுடன் கடன் மேளாவில் கலந்து கொண்டு நேரில் அளிக்கலாம். 18 முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.