சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்: சிலைக்கு தலைவர்கள் மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.;
சென்னை,
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாலை முரசு நிர்வாக இயக்குநர் ரா.கண்ணன் ஆதித்தனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பெ.சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் எம்.எல்.ஏக்கள் பரந்தாமன், எம்.வி பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இவர்களை தவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.