அம்பை:
அம்பை ஒன்றியம் அயன்சிங்கம்பட்டி ஊராட்சியில் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் 1 வாரம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அயன் சிங்கம்பட்டி கிராமம் முழுவதும் மெயின்ரோடு மற்றும் குளக்கரை ஓரங்களில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. அயன் சிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் சுடலை அரசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அன்னைராஜ், செல்லத்துரை, கணேசன், 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனர்.
இதைத்தொடர்ந்து கிராம உதயம், நெல்லை கேன்சர் கேர் சென்டர் இணைந்து இலவச புற்று நோய்கான விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாமை நடத்தியது. டாக்டர் பாண்டி செல்வி தலைமையில் செவிலியர்கள் ரூபாவதி, புவனேஷ்வரி, மனஜா ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.