சவுடுமண் அள்ளியவர் கைது
திருப்புல்லாணி அருகே சவுடுமண் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பட்டுராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொக்காரனேந்தல் பகுதியில் டிராக்டரில் சவுடுமண் அள்ளிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்து இதுதொடர்பாக பொக்காரனேந்தல் சாத்தையா மகன் பிரபு (வயது 33) என்பவரை கைது செய்தனர்.