அக்.14-ல் நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு
திமுக மகளிரணி மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை நந்தனத்தில் வருகிற அக்டோபர் 14-ம் தேதி திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், திமுக மகளிர் அணி மாநாட்டில் பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் இந்தியா கூட்டணி கட்சியின் மகளிர் தலைவர்கள் என்ற முறையில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் சுப்ரியா சுலே, மெகபூபா முப்தி ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள் என்று கனிமொழி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.