தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்

பெற்ற தாய் என்றும் பாராமல் திடீரென அங்கிருந்த ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார்.

Update: 2024-02-20 03:08 GMT

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டு பின்புறத்தில் மூதாட்டி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூத்த மகன், அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் திடீரென அங்கிருந்த ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார். பின்னர் அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து தாயாருக்கு மிரட்டல் விடுத்து சென்றார்.

மேலும் மகனின் தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மகன், தாய் தகராறு சம்பவத்தை இளைய மருமகள் தட்டிக்கேட்டதோடு அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெற்ற தாயை தாக்கி குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்