முன்னாள் அமைச்சர் மருமகன் தற்கொலை

மதுரை கருப்பாயூரணி அருகே முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-28 19:47 GMT

மதுரை கருப்பாயூரணி அருகே முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை செய்து கொண்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் (வயது 42) வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தனி அறையில் படுத்திருந்தார். நேற்று காலையில் வழக்கமான நேரத்தில் அவர் எழுந்திருக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சுமதி, அவர் படுத்திருந்த அறை கதவை தட்டினார். ஆனாலும் அவர் எழுந்து வரவில்லை. இதையடுத்து சரவணனின் சகோதரர் கர்ணன் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

காரணம் என்ன?

இதுகுறித்து உடனடியாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகன், தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்