சூரிய கிரகணம்:மாசாணி அம்மன் கோவில் நடை அடைப்பு
சூரிய கிரகணம்:மாசாணி அம்மன் கோவில் நடை அடைப்பு
ஆனைமலை
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்நிலையில் நேற்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 3 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நாளை வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.