சொக்கலிங்க சுவாமி கோவில் தேரோட்டம்

புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-06-11 16:30 GMT

புளியங்குடி:

புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக பிரமோற்ச திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி காலை 8 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., புளியங்குடி நகராட்சி தலைவி விஜயா சவுந்திரபாண்டியன், துணைத்தலைவர் அந்தோணிசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் வெங்கட்ராமன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சித்துராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரானது சிந்தாமணி நகரின் நான்கு வீதிகளின் வழியாக வந்து நிலையத்தை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவின் தக்கார் சாந்தி, ஆய்வாளர் லதா நிர்வாக அதிகாரி கணேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்