சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-09-17 16:20 GMT

சமூகநீதி நாளை முன்னிட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க ஊழியர்கள் திரும்பக்கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலாஜி, நீதியியல் தாசில்தார் பழனி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், குணசேகரன் மற்றும் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் கணபதி தலைமையில் அனைத்து பிரிவு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்