தா.பழூரில் பனிப்பொழிவு

தா.பழூரில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2023-01-08 18:30 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் நேற்று அதிகாலை முதல் மழை பொழிவும், பனிப்பொழிவும் மாறி மாறி இருந்தது. காலை முதல் மதியம் 1 மணி வரை தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்து கொண்டிருந்த அதே சமயத்தில் பனிப்பொழிவும் இருந்ததை உணர முடிந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. விதைப்பு பணி நிறைவடைந்த கடலை விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். சம்பா நடவு வயல்களில் தற்போது கதிர் வந்து கொண்டிருக்கும் நிலங்களில் இந்த மழை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்