அரசு பள்ளி குடிநீர் தொட்டிக்குள் பாம்பு

அரசு பள்ளி குடிநீர் தொட்டிக்குள் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-08 19:22 GMT

காரியாபட்டி, 

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆனைக்குளம் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி வருகிற 12-ந் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி துப்புரவு பணியாளர்கள் பள்ளி முழுவதும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் தொட்டியை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. குடிநீர் தொட்டிக்குள் பாம்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இதுகுறித்து திருச்சுழி தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பாம்பை பிடித்தனர். பின்னா் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்