விக்கிரமசிங்கபுரத்தில் நல்ல பாம்பு பிடிபட்டது
விக்கிரமசிங்கபுரத்தில் வீட்டுக்கு அருகில் கிடந்த நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.;
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அல்போன்ஸ். இவர் தனது வீட்டின் அருகே நல்லபாம்பு கிடந்ததை பார்த்து பாபநாசம் வனச்சரகர் சத்தியவேலுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று நல்லபாம்பை பிடித்து பாபநாசம் வனப்பகுதியில் விட்டனர்.