பாம்பு கடித்து குழந்தை சாவு

களம்பூர் அருகே பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்தது.

Update: 2022-06-03 16:23 GMT

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி கன்னிகா. இவர்களுக்கு அகிலேஷ் (6), தீசிதன் (3) என 2 ஆண் குழந்தைகளும், வைஷ்ணவி என்கிற 9 மாத பெண் குழந்தையும் உண்டு.

இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை வைஷ்ணவியை பாம்பு கடித்துள்ளது. உடனே குழந்தை சிகிச்சைக்காக களம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்