பென்னாகரம்:
பென்னாகரம் எட்டயாம்பட்டி ஏரிக்கரை ஓரத்தில் புதரில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுதொடர்பாக பென்னாகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் புதரில் பதுங்கி இருந்த பாம்பை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடித்தனர். அப்போது அந்த பாம்பு 7 அடி நீள சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சாரைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.