கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையத்துக்குள் புகுந்த பாம்பு

கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையத்துக்குள் புகுந்த பாம்பு

Update: 2022-08-23 21:31 GMT

அம்மாப்பேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி மின் நிலையத்துக்குள் பாம்பு ஒன்று நேற்று புகுந்தது. பின்னர் அந்த பாம்பு அங்குள்ள இரும்பு குழாயில் மீது ஏறியது. இதை கண்டதும் அங்கிருந்த மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த பாம்பு 10 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஆகும். மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள காட்டுப் பகுதியில் பத்திரமாக விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்