திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி ஊராட்சி ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கார்த்திக். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். மனைவி குழந்தைகள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் நேற்று மாலை கார்த்திக் தாய் வசந்தி (வயது57) வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது கரிச்சாங்குருவிகள் கத்தியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் திரும்பி பார்த்தபோது சுவர் ஓரத்தில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் அங்கு விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.