வாடிப்பட்டி
வாடிப்பட்டி பகுதியில் மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 7 சாக்கு மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்த கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 44) என்பவரை கைது செய்து, அரிசி மூடைகள் மற்றும் மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.