ஆத்தூர்
சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் அருகே கொத்தம்பாடியில் நேற்று மதியம் 3 மணி அளவில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அந்த காரில் புகையிலை பொருட்கள் 34 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த கார் கர்நாடக பதிவெண் கொண்டதாக உள்ளது. இதுகுறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.