நான்குவழிச்சாலையில் புகை மண்டலம்; வாகன ஓட்டிகள் அவதி

மேலூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீயால் நான்குவழிச்சாலையில் புகை மண்டலம் எழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2023-04-16 20:35 GMT

மேலூர், 

மேலூரில் திருச்சி நான்கு வழி சாலை அருகே மேலூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள பல லட்சம் எடையுள்ள குப்பைகள் மலை போல குவியல் குவியலாக குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளில் சமூக விரோதிகளால் தீ வைப்பு சம்பவமும் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்நிலையில் விஷமிகள் மீண்டும் இந்த குப்பை கிடங்கில் தீ வைத்து விட்டனர். தீ வேகமாக பரவி அருகிலுள்ள குடியிருப்புக்களிலும் நான்கு வழி சாலையிலும் கரும்புகை மண்டலமாகி மூடிவிட்டது. இதனால் மதுரை-திருச்சி நான்கு வழி சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

அந்த பகுதியில் குடியிருப்பில் வசிப்போர் பலர் மூச்சு திணறல் பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். இந்த குப்பை கிடங்கில் நடைபெறும் தொடர் தீ வைப்பு தொடர்பானவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்